• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறப்பு

Byவிஷா

May 9, 2024

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத் தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், நாளை மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார். வேத பண்டிதர்களின் வேதங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்படும். இதற்காக அங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் கட்டிடம் முழுவதும் 40 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.