


வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை வெயில் சித்தரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில் உடலுக்கு குளிர்ச்சியான இளநீர் நுங்கு தர்ப்பூசணி பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகுவதில் அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி-விழுப்புரம் கிழக்கு கடற்கரை சாலையில் நாகை, புத்தூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகாமையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் புதிய நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் ரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் பங்கேற்று பொது மக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


