கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு அரசின், தனியார் தங்கும் விடுதிகள் 1000_க்கும் அதிகமாக உள்ளது.

கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில் அண்மையில். கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஆலோசனையின் அடிப்படையில். கன்னியாகுமரி வரும் காவல்துறையின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த காவலர் குடும்பம் கன்னியாகுமரி வந்தால், காவல்துறைக்கு சொந்தமான காவலர் தங்கும் விடுதியில் நாள் ஒன்றுக்கு ரூ.125.00 கட்டணம் செலுத்தி தங்கும் வசதியை, தமிழகத்திலே கன்னியாகுமரியில் மட்டுமே காவல்துறையினருக்கு தங்கும் விடுதி உள்ளது.
கடந்த மாதம், கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் முன்னிலையில், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த 5_ஆண்டுகளுக்கு முன் தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்காணிப்பு பணியில் (செக்போஸ்ட்)இரவு பணியில் துணை ஆய்வாளர் வில்சன் கண்காணிப்பு பணியில் இருந்த போது, நள்ளிரவுக்கு பின் 2_மணி அளவில் தீவிர வாத இயக்கத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பணியில் இருந்த வில்சனை சுட்டு விட்டு தலைமறைவானார்கள். வில்சன் துப்பாக்கியால் சுட்ட இடத்திலே அவர் உடலில் இருந்து இரத்தம் கொப்பளிக்க மரணம் அடைந்தார். தமிழகமே அதிர்ந்தது இந்த நிகழ்வைக் கண்டு. வில்சன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழக அரசு ரூ.ஒரு கோடி நிவாரணத்தை வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் கொடுத்தனர். குற்ற சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி,பெங்களூரா, திருவனந்தபுரம் என 11_பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
தீவிர வாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான வில்சன் நினைவை குமரி காவல்துறை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில்.
கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள காவல்துறை சுற்றுலா தங்கும் விடுதிக்கு தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான வில்சனின் பெயரை சூட்டினார். குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் சூட்டியதுடன், அந்த விடுதியை மறைந்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியை கொண்டு திறந்து வைத்து நினைவு பரிசையும் வழங்கினார்.

காவலர் சுற்றுலா விடுதியின் முன் தரைப்பகுதியில் புல் விரிப்பு மற்றும் மலர் செடிகளுடன் கூடிய பகுதியை அமைத்து கொடுத்த. அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் பகுதியில் உள்ள ரோகினி பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் உருவாக்கி கொடுத்த கல்லூரி நிர்வாகி விஷ்ணுவிற்க்கு, காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின். வில்சனின் பெயரை கன்னியாகுமரியில் உள்ள காவலர் சுற்றுலா தங்கும் விடுதிக்கு சூட்டியதில் பெருமை அடைவதையும் திறப்பு நிகழ்வின் அடையாளமான “ரிப்பனை” வெட்டி திறந்து வைத்த ஏஞ்சலின் மேரி வில்சனுக்கும், சிறப்பு அழைப்பாளர் விஷ்ணுவுக்கும் நன்றி தெரிவித்தார்.