• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிணத்துக்கடவில் ஆன்லைன் லாட்டரி மோசடி: இளைஞன் கைது !

BySeenu

Jan 8, 2025

கிணத்துக்கடவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி மோசடி நடத்திய இளைஞன் ஒருவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை, சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தென்னரசு (வயது 22) என்பவன், கிணத்துக்கடவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளான். கேரள மாநில 3 மற்றும் 4 இலக்க எண்களை காண்பித்து லாட்டரி வாங்கினால் நிச்சயம் பரிசு வாங்கி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மக்களை வளைத்துள்ளான்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், தென்னரசை கைது செய்து, அவனிடம் இருந்த பிரிண்டர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தென்னரசு மீது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி, பெருங்குடி, சிலைமான் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே ஆன்லைன் லாட்டரி மோசடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் யாரும் இது போன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.