

இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை பயணத்தை மேற்கொண்டார் இந்நிலையில் இந்த பயணம் நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பாதயாத்திரை விழிப்புணர்வு பேரணி தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சிலையில் இருந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் சுமார் 1000 க்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி. உதயம், மாவட்ட துணை செயலாளர் டி.தாமஸ், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

