
நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி, சத்யம் பொறியியல் கல்லூரி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் ‘காலநிலை மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. ஹோலிகிராஸ் கல்லுரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை துவங்கி வைத்து உரையாற்றினார்.

விஜய்வசந்த் பேசும் போது, உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய அதிகாரம் மற்றும் அறிவு இளைஞர்கள் கையில் உள்ளது. நமது பூமி சுற்றுப்புற சூழல் பல வகையில் மாசடைந்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை தன்மையை இழந்து வருகிறது.
நமது வருங்கால தலைமுறையினருக்கு நமது பூமியை மாசற்றதாக மாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறது. இந்த கருத்தரங்கை நடத்தும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள். பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல கருத்தரங்குகள் நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த மண்ணின் மைந்தன் என்ற நிலையிலும் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எனது அனைத்து ஆதரவையும் இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பசுமைப் புரட்சி ஒன்றை செய்திடுவோம் என விஜய் வசந்த் அவர்கள் பேசினார். ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி சகாய செல்வி அவர்கள் தலைமை உரையாற்ற சத்தியம் பொறியியல் கல்லூரி முதல்வர் தினகர் வரவேற்புரை ஆற்றினார். மூத்த பத்திரிகையாளர் திருமதி கவிதா முரளிதரன் இந்த கருத்தரங்கின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மண்டல சிவபிரபு, உட்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
