விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் கண்ணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (25 ) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23) ,எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த கரன் பாண்டியன் (25), மூன்று பேரும் தாயில்பட்டியில் இருந்து மடத்துபட்டியில் உள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசியில் இருந்து தாயில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர். இதில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். மேலும் காயமடைந்த சரவணகுமார், கரன் பாண்டியன், இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சதீஷ்குமாரின் தகப்பனார் கண்ணன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் காரின் உரிமையாளர் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (60 ) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










