• Fri. Apr 18th, 2025

லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி!!!

ByVasanth Siddharthan

Apr 9, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இன்று காலை தண்ணீர் பாய்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கேரளா மலப்புரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சரக்கு வாகனத்தை ஒட்டன்சத்திரம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முழுவதுமாக நசுங்கிய நிலையில் சரக்கு வாகன ஓட்டுநர் கணேசன் உள்ளே சிக்கிய நிலையில் இருந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் அவர் ஏற்கனவே விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து சம்பவம் குறித்து சாமிநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.