புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே வரும் போது அங்கு வந்த மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மலையூர் போலீசார் முருகேசன் சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து உறவினர்கள் கறம்பக்குடி – புதுக்கோட்டை சாலையில் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானதையடுத்து போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அந்த பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸ் சாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்த விவாகரத்தில் முருகேசன் தலையிட்ட காரணத்தால் முன்பாக இருந்து வந்துள்ளதாகவும், இதனால் முருகேசன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதன் அடிப்படையில் , அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரின் நண்பர் என இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள், உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.