விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ள
பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனை முன்பு தளவாய்புரத்திலிருந்து அரிசி ஏற்றி வந்த லாரி இராஜபாளையத்தில் இருந்து சேத்தூர் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

சேத்தூர் பாரதி நகர் பகுதியில் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஐயப்பன் வயது 42 ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் சேத்தூர் ஜீவா நகர் பகுதியில் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிமுத்து வயது 43 கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
