• Tue. Mar 21st, 2023

மதுரை அருகே சொகுசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

மதுரை வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி பத்துக்கு மேற்பட்டோர் காயம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்னும் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற தனியார் சொகுசு பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது வேகமாக மோதியதில் பஸ்ஸின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார் மேலும் பஸ்ஸில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக வந்த வாடிப்பட்டி போலீசார் காயமடைந்த அனைவரையும்108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்
வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் நடப்பதால் இந்த பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *