• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நோய் தாக்குதலால் ரோட்டில் கொட்டப்பட்ட நூறு டன் வெள்ளைப்பூசணிகள்

Byவிஷா

May 2, 2025

நோய்தாக்குதல் மற்றும் வியாபாரிகள் வாங்க முன்வராத காரணத்தினால், 100 டன் வெள்ளைப்பூசணிக்காய்களை விவசாயிகள் ரோட்டில் கொட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 200 ஏக்கரில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, கேரளா, கன்னியாகுமரி பகுதிகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.10,000–15,000 வரை விலை கிடைத்ததால் இந்தாண்டு கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் மாறுபட்ட சீதோஷ்ணம், புழு தாக்குதல் மற்றும் நோய் பரவலால் பூசணியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் இந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.2,000–2,500 மட்டுமே வழங்க முன்வந்ததால், பலர் அறுவடை செய்யாமலேயே பூசணியை வயலில் விட்டனர். மேலும், லாரி வசதி இல்லாததால் டிராக்டரில் கொண்டு வரும் போதும் வாடகைச் செலவுகள் கூட நஷ்டமாகவே மாறின. விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று எதிர்பார்க்கின்றனர்