• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முசிறி ஊரக வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

ByJawahar

Feb 10, 2023

|ஊரக உள்ளாட்சித் துறை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனம் சார்பில் ஊராக வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் முசிறி யூனியன் அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் மாலா தலைமை வகித்தார். பயிற்றுநர் சாந்தி வரவேற்றார், வட்டார ஊராட்சி திட்டமிடுதல் குழு உறுப்பினர்கள் வட்டார துறை சார் பணி உறுப்பினர்கள் வட்டார சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஊரக வளர்ச்சி துறை வேளாண்துறை பள்ளி கல்வித்துறை பொதுப்பணித்துறை கால்நடை துறை மருத்துவ துறை உள்ளிட்ட 18 துறைகளுக்கு கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைப் பயிற்சி நடந்தது.முடிவில் பயிற்றுனர் ஜமீலா தேவி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் முசிறி ,தாப்பேட்டை ,துறையூர் உப்பிலியபுரம் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.