பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் (31-08-2025) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், கேரள மாணவர்கள் பாரம்பரிய உடையில் ஊர்வலமாக வந்து, பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களை வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ராஜபூபதி அவர்கள் முன்னிலை வகித்து குத்துவிளக்குயேற்றி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்ததார்.

காலை நேரத்தில் வளாகத்தின் மையப் பந்தல் பகுதியில் அத்தப்பூ கோலம் அமைக்கும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. பல்வேறு துறைகளின் மாணவர்கள் இணைந்து வடிவமைத்த பத்து அடுக்கு பூக்கோலம், கேரள பாரம்பரிய அழகிய வடிவங்களை பிரதிபலித்தது.
விழாவில் உரையாற்றிய வேந்தர் சீனிவாசன் அவர்கள், “ஓணம் என்பது பண்டிகை மட்டுமல்ல; அது கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முழுமையான கொண்டாட்டம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த தருணம், எங்கள் பல்கலைக்கழகத்தின் பன்முக கலாச்சாரப் பார்வையைத் தெளிவாக காட்டுகிறது. வளமும் தர்மமும் ஒளிரும் மகாபலி சக்ரவர்த்தியின் நீதிநெறியைப் போற்றும் நாளில், உதவி தேவைப்படுவோருக்குக் கைநீட்டும் மனப்பான்மை மாணவர்களிடத்தில் என்றும் வளரவெண்டும்,” எனக் கூறினார்.

கலாச்சார நிகழ்ச்சிகளில் கேரள நாட்டுப்புற நடனம், மோகினியாட்டம், திருவாதிர நடனம், குறும்பாடல் ஆகியவை பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றன. ஓணம் க்விஸ், மஞ்சாடி விளையாட்டு, பாயல் போட்டி, பாரம்பரிய உடை அணிவகுப்பு போன்ற போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஒணம் சாத்யா (Onam Sadya) விருந்தில் பனையிலையிலான உணவுகள் — அவியல், சாம்பார், கிச்சடி, இனிப்பு வகைகளில் பாயசம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய உணவுகள் அனைத்து மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டது.முன்னதாக செவிலியர் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி அதுல்யாமது வரவேற்புரை வழங்கினார். நிறைவாக துணை மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்வினி கிருஷ்ணா நன்றி கூறினார்.

இந்த விழாவில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஷ்பிட்டல் டீன் டாக்டர் விஸ்வநாதன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பிரிவு தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.