• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விஜயதசமியை முன்னிட்டு, தெலுங்கு தேவாங்க செட்டியார் சமூகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம்..,

BySeenu

Oct 25, 2023

விஜயதசமியை முன்னிட்டு வீடுகளில் பூஜைகள் செய்தும், கோவில்களுக்கு சென்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்டு தோறும் விஜயதசமி நாளில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் வெகு விமர்சையாக விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு உடம்பில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் நிகழ்ச்சியை நடத்தி அம்மனை தரிசித்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு தெலுங்கு தேவாங்க செட்டியார் சமூகம் மற்றும் சந்தா தனம்மாள் ராமச்சந்திரன் குடும்பத்தார்கள் சார்பில் ஆயிரக்கணக்கானோரும் மாபெரும் அன்னதானத்தை வழங்கினர். தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் அன்னதானம் வழங்கபடும் என அன்னதான குழுவினர் தெரிவித்துள்ளனர்.