

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இந்திய கொலஸ்ட் தின விழாவினை முன்னிட்டு படைவீரர்கள் பாசறை, சிவகங்கை சீமை மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து நடத்தும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியினை கோட்டாட்சியர் சுகிர்தா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தார். முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சைக்கிளும், 5.30 நிமிடத்திற்குள் 1600 மீட்டரை கடந்தவர்களுக்கு 1500 ரூபாய் ரொக்க பரிசும், 20 Pull ups எடுத்தவர்களுக்கு பதக்கமும் மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


