
நாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகே அமைந்துள்ள சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள்ராஜ், மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
