

இந்திய திருநாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா இன்று முதல் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் கே.எஸ்.அசோக்குமார் என்பவர் ரூ.8 லட்சம் மதிப்பில் இறப்பு காலங்களில் பொதுமக்கள் பயன்படும் வகையில் இலவசமாக நவீன குளிரூட்டப்பட்ட அமரர் ஊர்தி வாகனத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி இன்று வாடிப்பட்டியில் அமைந்துள்ள அருணா அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டு மையத்திற்கு வாயிலாக பொதுமக்களின் நலனுக்காக இலவச அமரர் ஊர்தி வாகனத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த வாகனம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கும், மேலும்., தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இந்த இலவச நவீன குளிர்சாதன அமரர் ஊர்தி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு துக்க வீட்டில் பிரேதத்தை அடக்கம் செய்ய கொண்டு செல்ல இதற்காக மட்டும் சுமார் 15ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் லயன் டாக்டர் – கே.எஸ்.அசோக்குமார் தலைமையில் 77வது சுதந்திர தினத்தையொட்டி இலவச நவீன அமரர் ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் பொது முன்னாள் சேர்மன் K.சோனை அம்பலம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, இளங்கோவன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
