சிவகங்கை அருகே நாலு கோட்டை கிராம அய்யனார் கோவில் புரவி எடுப்பு
திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரியமாடு, நடுமாடு, சிறியமாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 40 ஜோடி மாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை, ஒன்று முந்திக்கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியினை, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.
நாலுகோட்டை அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம்…
