• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு..,ராஜபாளையத்தில் மௌன ஊர்வலம்..!

Byவிஷா

Dec 5, 2023

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் அதிமுக சார்பாக மௌன ஊர்வலம் நடத்தினர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் அதிமுக தொகுதி கழகம் சார்பாக பழைய பேருந்து நிலையம் முன்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் காந்தி சிலை ரவுண்டானா ஜவகர் மைதானத்தில் வைத்து அம்மா படத்திற்கு முன்பாக கழக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர். மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாபுராஜ். நகரச் செயலாளர்கள் துரை முருகேசன். பரமசிவம். ஒன்றிய செயலாளர்கள் குருசாமி. நவரத்தினம். பேரூர் கழகச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் நகர ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.