• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி
ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வருகிற 6-ந் தேதி (நாளை மறுநாள்) பாபர் மசூதி இடுப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரயில்வே நிலைய நுழைவு பகுதியில் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர். மேலும், சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவ்வாறு பிடிபட்டவர்களின் விவரங்களை சேகரித்து வைத்து கொண்டு அனுப்பி வைத்தார்கள். இதேபோல் ஓடும் ரயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.