• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆனி மாத அமாவாசை..,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

Byவிஷா

Jun 17, 2023

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்தகோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்ததை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்கள் மட்டுமே பக்தர் கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது. சகரகிரியில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலுக்கு பிரதோசம் மற்றும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முதல் நாளை 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். வானம் மேகமூட்டம், அல்லது மழை பெய்தால் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.