• Fri. Sep 29th, 2023

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

Byவிஷா

Jun 17, 2023

நெய்வேலி நிறுவனத்தில் உள்ள என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூன் 25ஆம் தேதியன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிக்கை வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் 22, 23- தேதிகளில் உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed