• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மகளிர் வெற்றி பயணத்திட்ட தொடக்க நாளில் பெண் பயனிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனர்..,

ByKalamegam Viswanathan

Oct 3, 2026

தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேட்டில் நேற்று காலை தொடங்கி வைத்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது இந்த நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காடுபட்டி கிராமத்திற்கு சென்ற 65 ஏ என்ற பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனரால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியை சேர்ந்த செல்வி இவர் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காடுபட்டி கிராமத்திற்கு சென்ற 65 ஏ என்ற எண் கொண்ட பேருந்தில் நேற்று காலை தச்சம்பத்து கிராமத்தில் பேருந்தில் ஏறிய செல்வியிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளதாக கூறியும் வலுக்கட்டாயமாக நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியதாக கூறப்படுகிறது

இதனால் வேறு வழியின்றி தச்சம்பத்து முதல் தென்கரை வரை 9 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். தமிழக அரசின் திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் மகளிர்க் காண முக்கிய திட்டங்களில் ஒன்றான விரிவாக்கப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தின் தொடக்க நாளில் பெண் பயனியிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனரால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து அரசின் உத்தரவுகளை பின்பற்றாத பணியாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.