• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் கீர்த்தனா தலைமையில் எம் வி கருப்பையா முன்னிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்..,

ByKalamegam Viswanathan

Oct 3, 2026

தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இறுதிக்கட்ட தீவிர தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளனர்.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா முன்னிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் அதிகாலை முதலே வீடு வீடாக சென்று விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்ற சோழவந்தான் எம் எல் ஏ எம் வி கருப்பையா மற்றும் நிர்வாகிகளுக்கு தாராபுரம் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேளதாளத்துடன் வான வேடிக்கை மற்றும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளை வரவேற்றனர். தொடர்ந்து எங்களது அனைவரின் வாக்குகளும் விசில் சின்னத்திற்கு தான் என்றும் உறுதி அளித்தனர். தமிழக முதல்வர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தவும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள சமீபத்திய திட்டங்களான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் விரிவாக்கப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டம் ஆகிய திட்டங்களை கூறி இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முதல்வரின் கரத்தை வலுப்படுத்த விசில் சின்னத்திற்கு அதிக அளவில் வாக்களித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் சத்யபாமாவை வெற்றி பெறச் செய்வோம் என்றும் உறுதி அளித்தனர்.

எம்எல்ஏ கருப்பையாவுடன் வாடிப்பட்டி சோழவந்தான் அலங்காநல்லூர் பாலமேடு குமாரம் சமயநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.