

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழவையொட்டி சிவகாசியில் அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசியில் திருத்தங்கல் வ.உசி சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக, அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன் ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விளக்கம் 001, திருத்தங்கல் வ.உசி சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

