• Wed. Mar 26th, 2025

உசிலம்பட்டி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

ByP.Thangapandi

Jan 26, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சரக காவல்த்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள 5க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.