

நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை உசிலம்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையின் சார்பில் வழங்கினர்.

நாடுமுழுவதும் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, போக்குவரத்து காவல் துறையின் சார்பில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வராணி தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு தேசிய கொடி ( பேட்ஜ்) னை வழங்கினர்.


