சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் அருகே குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் கோசாலை பராமரிக்கப் படுகிறது.

இங்கு 15 க்கும் மேற்பட்ட பசு, காளைகள் உள்ளன. கோசாலை பராமரிப்பு, முறையாக உள்ளதா என குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன் கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் உள்ளனர்.
