கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜகாங்கீர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வழங்கி அன்பினை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் முகமது கான், முத்துஷலஷா முகமதுஇக்பால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்தது தான் இந்தியா என்ற ஒற்றுமையை உணர்த்தினார்கள்.




