• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,

ByP.Thangapandi

Jun 10, 2026

மதுரை மண்ணின் மைந்தன் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்., இந்நிலையில் திரைத்துறையினர், தமிழக முதல்வர், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற சூழலில்,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு இயக்குநர் இமயம் மறைந்த பாரதிராஜா திருஉருவப் படத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி ஓம் சாந்தி ஓம் சாந்தி அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி அஞ்சலி செலுத்தினர்.,

இதில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் வெற்றிலை நாகராஜ்,பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்ட செயலாளர் தீபன் முத்தையா, மாவட்டத் தலைவர் கல்வியாளர் பிரிவு பிரசாத் கண்ணன், மாவட்டத் தலைவர் சிறுபான்மையின் பிரிவு ரெஜினா மேரி,மாவட்டச் செயலாளர்கள், சின்னச்சாமி, இளையராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,