• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை தேமுதிக சார்பில், கேப்டன் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, இனிப்புகள் வழங்கி அன்னதானம்…

ByG.Suresh

Aug 25, 2024

சிவகங்கை தேமுதிக கட்சியின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும், ஊனமுற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு வருகின்ற சூழலில் பொதுமக்களுக்கு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, சிவகங்கையில் தேமுதிக மாவட்ட துனை செயலாளர் ஞானமுத்து தலைமையில் நகரச் செயலாளர் தர்மராஜ் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பனங்குடி ரோட்டின் அருகே உள்ள தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கேப்டன் அறக்கட்டளை ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது.

அதனை அடுத்த சிவகங்கை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . அதனை தொகை மேலூர் ரோடு அருகே உள்ள ஆதரவற்ற தங்கும் விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவை தேமுதிக மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அருணாகண்ணன்,மாவட்ட பொருளாளர் துரைபாஸ்கர், மாவட்ட துனை செயலாளர் ஞானமுத்து, நகரச் செயலாளர் தர்மராஜ், மாவட்ட வழக்கறிஞர் செயளாலர் சௌந்தரராஜன் மற்றும் தமிழ் முருகன், வேல்முருகன், வன்னி முத்து, ரமேஷ், பாலகுரு, பீனூ அசல் ராஜா கண்ணன் சண்முகம் ராமகிருஷ்ணன் சத்தி ஏராளமான கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.