சுதந்திரப் போராட்டத் தியாகி வ. உ. சி. யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள வ. உ. சி. யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா முன்னாள் சேர்மன் எம்.கே முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் அணி செயலாளர் லட்சுமி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், வசந்தி கணேசன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ் இளைஞர் அணி தண்டபாணி துரை புஷ்பம் 5வது வார்டு மணிகண்டன், 2வது வார்டு மருது சேது, தென்கரை ராமலிங்கம், கச்சிராயிருப்பு முனியாண்டி, பேட்டை பாலா, சோழவந்தான் ராஜா, குருவித்துறை பாபு, பி. ஆர். சி. நாகராஜ், பேட்டை ராஜா, ஜூஸ் கடை கென்னடி உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.