திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர். தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் தோமையார்புரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே, பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 3 ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்ததில் அவை வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 3 ஆம்னி பஸ்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, அரசுக்கு செலுத்தவேண்டிய வரிபாக்கி, விதிமீறல் அடிப்படையில் 3 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.