• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓமைக்ரான் அச்சுறுத்தல் – 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு

ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 358 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவல் அதிகமாக பதிவாகியுள்ளது.

ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள போதிலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது மற்றும் மக்கள் கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.குஜராத் அரசு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய இடங்களில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்தது.

அரியானா மாநிலத்தில் ஜனவரி 1, 2022 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.