• Sat. Mar 22nd, 2025

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்

BySeenu

Mar 21, 2024

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உலக சோதனை சாவடிகளிலும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் பணியாளர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பணிக்கு வரும் பொழுது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அடையாள அட்டை இல்லாத பணியாளர்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.