• Sat. Apr 27th, 2024

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை பகீர் புகார்…

BySeenu

Mar 21, 2024

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர்,வீராங்கனைகள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை குற்றம் சாட்டி வேதனை தெரிவித்தார்.

கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா ராணி, மாற்றுத்திறனாளியான தீபீகா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்..இந்நலையி்ல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக கூறினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே மனு அளிக்க வந்துள்ளதாக கூறினார். சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர், உலக தரவரிசையில் 49 வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார். இது போன்று பல திறமையான வீர்ர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவநாக கூறிய அவர்,சரியான தகவல்களை மத்திய மாநில விளையாட்டு ஆணையங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர்,பல திறமையான வீரர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார்..இதை அரசு கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் சர்வதேச அளவில் இன்னும் பல திறமையான மாற்றுத்திறனாளி வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *