கன்னியாகுமரி மூன்று கடல் சங்கமம் பகுதியில் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இந்த பூசையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து,தலையில் சுமந்து சென்று கடலில் தூவி வேத மந்திரங்கள் ஓதி முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி பிரார்த்தனை-பித்ரு தோஷம் நீங்க வழிபாடு-ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராடி வருகின்றனர்.





