• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 75ஆவது பிறந்தநாள் – 72 கிலோ கேக் தயாரிப்பு…

Byமதி

Oct 17, 2021

ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், தனது 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தில் 72 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளர் உருவாக்கியுள்ள இந்த சாக்லேட் கேக்கில், நவீன் பட்நாயக் பயன்படுத்தும் கோல்ஃப் மட்டை மற்றும் பந்தும் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் ஒடிசாவில் பயிற்சி பெற்ற பல வீரர், வீராங்கனைகளை மற்றும் ஹாக்கி அணி பதக்கங்களை குவித்தனர். இதனால் நவீன் பட்நாயக் இந்தியா முழுக்க உள்ள விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், மாணவர்களின் சிறப்பான பாராட்டை பெற்றுள்ளார் என்பதால் இந்த பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.