திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது

தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
தேனி பங்களாமேடு பகுதியில் கூடியிருந்த திமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

பின்னர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெண்கள் ஆலத்தி எடுத்தும், மலர் மாலைகள் அணிவித்தும் மற்றும் பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.
தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200கும் மேற்பட்ட பூக்களை தூவி வரவேற்றனர்.




