திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு. இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் செல்பி எடுத்துக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்த மார்கண்டேயன் உயிரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து உயிர்பித்த தலம்.

இங்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயுள் விருத்தி வேண்டி 60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70ல் பீமராத சாந்தி 80ல் சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமண வைபவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருக்கடையூர் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வருகை தந்தார். அவரது சகோதரர் ராஜாவுக்கு 70 வயது பூர்த்தியை முன்னிட்டு ராஜா மற்றும் அவர் மனைவி சந்திரகலாவதி ஆகியோருக்கு பீமரத சாந்தி திருமணம் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் உறவினர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது கோவிலில் இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து ஓ. பன்னீர்செல்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர் சிரித்த முகத்துடன் அவரும் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். பல பக்தர்கள் பன்னீர்செல்வத்தை பார்த்து இன்முகத்துடன் வணக்கம் செய்தனர். பதிலுக்கு அவரும் தொடர்ந்து வணக்கம் செய்து கொண்டே சென்றார். திருமண வைபவிழா நடைபெற்று வருகிறது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)