புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமியின் 75-வது பிறந்த நாள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுகன் தலைமையில் ஏழை மாரியம்மன் கோவில் புதுச்சேரி முதமைச்சர் ரெங்கசாமி நீடூழி வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து காரைக்காலில் 15 ஆண்டுகளாக நியாய விலைக்கடையில் பணிபுரியும் தினக் கூலி தொழிலாளர்கள் 63 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ 4000 மாத ஊதியத்தை 12,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.