புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையில் தொடங்கப்பட்டு மூன்று முறை ஆட்சியை கைப்பற்றிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் என் ஆர் பாசறை மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காரைக்காலில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. என்.ஆர் பாசறை மாநில தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர் பாசறை நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். என்.ஆர் பாசறை மாநில செயலாளராக மகாலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் ஜோதி@ புஷ்பவள்ளி, மாநில இணை செயலாளர் கவிதா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட ஏராளமான என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர் பாசறை மாநில தலைவர் கனகராஜ் ” 2026-ல் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும் அதற்கு உறுதுணையாக 5 சட்டமன்ற உறுப்பினர்களை காரைக்கால் மாவட்டம் கொடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆனந்தன் ” என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியின் பாசத்திற்கு கட்டுப்பட்டது தான் இந்த கட்சி எனவும் தனி மாநில அந்தஸ்தோடு முதல் முதலமைச்சராக ரங்கசாமி ஆட்சியில் அமருவார் என்று தெரிவித்தார்.