• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இனி சுப்ரீம் கோர்ட் விசாரணையை செல்போனில் பார்க்கலாம்

ByA.Tamilselvan

Dec 8, 2022

உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி 2.0 நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம், சட்ட அதிகாரிகள், மத்திய அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகள் இனி நீதிமன்ற நடைமுறைகளை நிகழ்நேரத்தில் காண முடியும்.
உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று காலை வெளியிட்டார். அதன் பின் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “இந்த ஆண்ட்ராய்டு வகை செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கான ஐஓஎஸ் பதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும்.
இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரிகள் தங்களின் வழக்கு நிலவரம், தீர்ப்புகள், உத்தரவுகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட நீதிமன்றத்தின் நடவடிக்கைகைளை நிகழ் நேரத்தில் காண முடியும்” என்று தெரிவித்தார்.