• Wed. Apr 24th, 2024

தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்

ByA.Tamilselvan

Dec 12, 2022

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்தது. இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது. தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *