• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இனி ஜிபே, போன்பே மூலம் ரேஷன் கடைகளில் பணம் செலுத்தலாம்!!

ByA.Tamilselvan

Sep 3, 2022

ரேசன்கடைகளில் இனி ஜிபே,போன்பே மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை.
கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவட்டந்தோறும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சில நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.