• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆரம்பித்த இடத்திற்கே வந்தடைந்த கோட்டாபய ராஜபக்சே

Byகாயத்ரி

Sep 3, 2022

மக்களின் கடும் எதிர்ப்பால் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு மக்களின் அத்தியாவசிய பொருட்கள் என்பது உச்சத்தை அடைந்தது. இதனால் இலங்கை மக்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக திரும்பினர் . மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்து நிலையில் போராட்டத்தின் பலனாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மக்களின் போராட்டம் கலவரமாக மாறிய காரணத்தினால் அவர்கள் இலங்கையில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இலங்கையிலிருந்து தப்பி சென்ற கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவு, சிங்கப்பூர் சென்றார். அங்கு விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11ஆம் தேதி தாய்லாந்துக்கு வருகை புரிந்தார். தற்போது சுமார் 7 வாரங்களுக்கு பிறகு இலங்கை திரும்பினார் கோட்டாபய.