• Fri. Mar 29th, 2024

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் அல்லது தமிழர் இறையாண்மை நாளாக கொண்டாட வேண்டும் – விசிக!..

Byகுமார்

Oct 23, 2021

மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் அல்லது தமிழர் இறையாண்மை நாளாக கொண்டாட வேண்டும், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும் என்பதை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி சங்கரலிங்கனாருக்கு மணி மண்டபம் அமைப்பது குறித்தும் மற்றும் அவரது பெயரில் தமிழர் இறையாண்மை நாளில் விருது அறிவிக்க வேண்டும் என்று கூறியனார்.

கொரோனா காலகட்டத்தில் கைதட்டியது, விளக்கேற்றியது குறித்து பிரதமர் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது சரியில்லை என்பதை பிரதமர் உணர்ந்ததற்கு நன்றி என்றார்.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் எதிர்கட்சி மீது பழி சுமத்தபார்க்கிறார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அணுகுமுறையை பிரதமர் செய்ததை பொதுமக்கள் மத்தியிலயே வேடிக்கையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மேலும் அவர், வனபாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பற்றிய கேள்விக்கு, இது அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும், இது குறித்து முழுவிவரம் அறிந்த பிறகு கருத்து சொல்கிறேன் என்று கூறினார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி சித்திரவதை செய்து கொலை செய்யும் நிலை தொடர்ந்துவருகிறது. இந்திய அரசு இதனை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கை அரசுக்கு துணைபோகும் நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கோள்வது கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படை மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *