பிரபல ரவுடி வச்சு செல்வம் பிடிவாரண்டு பேரில் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் ஆள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. 2012 வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் வரிச்சியூர் செல்வத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.