பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் படுகொலைக்கு பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை குற்றவாளிகள், நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் என காவல்துறை தேடி, தேடி பிடித்து கைது செய்து வரும் நிலையில், பழைய குற்றவாளிகளை காவல்துறை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவருமான பிரபல ரவுடியாக வலம் வந்த வாலி என்ற சுயம்புலிங்கம் மீது 20_க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு வழக்கின் சம்பந்தமாக ஈத்தமொழி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்து செய்த நிலையில், சுயம்புலிங்கம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. இவரது மனைவி சுகி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் சுயம்பு லிங்கத்தை கைது செய்ததை கண்டித்து மனு கொடுத்துள்ளார்.

சுயம்புலிங்கத்தின் மீது பல வழக்குகள் உள்ள போதும். கடந்த காலத்தில் காவலர்கள் முன்னிலையில் தைரியமாக நடமாடி வந்ததை, இவரது கைது குறித்து பொது மக்களின் மத்தியில் ஒரு சர்ச்சை பரவலாக வலம் வருகிறது.